ஹோட்டலில் புகுந்த காட்டு யானை - ஊழியர்கள் அலறியடித்து கொண்டு ஓட்டம்
கோவை தடாகம் பகுதியில் ஹோட்டலில் புகுந்த காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது.
கோவை தடாகம் பகுதியில் ஹோட்டலில் புகுந்த காட்டு யானை அட்டகாசத்தில் ஈடுபட்டது. தடாகம் பகுதியில் இரவில் உலா வந்த காட்டு யானை அங்கிருந்த ஹோட்டலுக்குள் புகுந்தது. இதனையடுத்து, அங்கிருந்த ஊழியர்கள், அலறியடித்து ஓடினர். அந்த யானை, தும்பிக்கையால் அங்கிருந்த பொருட்களை தூக்கிப் போட்டு சாப்பாட்டை தேடியது. இந்த காட்சிகள் அனைத்தும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவானது.
Next Story

