சீர்காழி அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை உடைத்து போராட்டம்...

நாகை மாவட்டம் சீர்காழி அருகே, 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி அருகே ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை உடைத்து போராட்டம்...
x
நாகை மாவட்டம் சீர்காழி அருகே, 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய மதுபாட்டில்களை உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொடுவாய் மீனவ கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கங்கா உள்ளிட்ட சிலர் புதுச்சேரியிலிருந்து மதுபாட்டில்களை குறைந்த விலைக்கு வாங்கி விற்பதாக  புகார் எழுந்தது. இதனால், பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இது குறித்து போலீசார் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கங்கா வீட்டில் இருந்து மதுபாட்டில்களை எடுத்து வந்து உடைத்து, தீயில் போட்டு கொளுத்தினர். 


Next Story

மேலும் செய்திகள்