கோவையில் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி

கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது.
கோவையில் கழிவுநீர் சுத்தம் செய்யும் போது உயிரிழந்தவர்களுக்கு நிதியுதவி
x
கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சிகளில்  பணிபுரியும் துப்புரவு தொழிலாளர் நலன் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் கிர்மாணி , மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு துப்புரவு தொழிலாளர்களுக்கு மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தினர். இந்த கூட்டத்தில், கடந்த மாதம் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு தேசிய தூய்மை தொழிலாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஸ் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்