மாணவர்களுக்கு புத்தகங்கள் தரவில்லை என புகார் : அரசுப்பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்
பதிவு : ஜூலை 09, 2019, 04:01 PM
மன்னார்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மன்னார்குடி அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படாததை கண்டித்து, மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னவால் கோட்டை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து  12 ஆம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட கல்வி அதிகாரி, பாட நூல்களை உடனடியாக வரவழைத்து மாணவர்களுக்கு வழங்கினார்.

தொடர்புடைய செய்திகள்

மருத்துவ படிப்புகளில் 25 % இடங்கள் : உயர்த்தி கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி

மருத்துவ படிப்புகளில் 25% இடங்களை அதிகரித்துக் கொள்ள தமிழகத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

987 views

பிற செய்திகள்

பாலாற்றில் உள்ள தடுப்பணைகளை உயர்த்தும் ஆந்திர அரசை எச்சரிக்க வேண்டும் - ராமதாஸ்

பாலாற்றின் குறுக்கே சட்டவிரோதமாக 21 தடுப்பணைகளை கட்டியுள்ள ஆந்திர அரசு, இப்போது அவற்றின் உயரத்தை அதிகரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

12 views

பாலாற்றில் உள்ள அணைகளை உயர்த்தும் ஆந்திர அரசு : தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்ணையை உயர்த்தும் பணியில் ஆந்திர அரசு ஈடுபட்டுள்ளதால் திருவண்ணாமலை உள்ளிட்ட 5 மாவட்டங்கள் பாலைவனம் ஆகும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

8 views

கடலூர், நாகையில் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி...

தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடக்கோரி காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கத்தின் சார்பில் பல ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

11 views

கஜா புயல் - மறியலில் ஈடுபட்ட 140 பேர் மீதான வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கஜா புயலின் போது நிவாரணம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டதாக 140 பேர் மீது தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

10 views

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு, உயர்நீதிமன்றம் விதித்த தடை நீக்கம் - உச்சநீதிமன்றம்

தமிழ்நாடு லோக் ஆயுக்தா உறுப்பினர் நியமனத்திற்கு எதிராக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த இடைக்கால தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

16 views

பெரும்பாலான மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

36 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.