முன்னாள் டிஜிபி வீட்டில் தேக்கு நாற்காலி திருட்டு : சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை கைது செய்த போலீசார்

முன்னாள் டிஜிபி வீட்டில் தேக்கு நாற்காலியை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
முன்னாள் டிஜிபி வீட்டில் தேக்கு நாற்காலி திருட்டு : சிசிடிவி காட்சிகளை வைத்து திருடனை கைது செய்த போலீசார்
x
முன்னாள் டிஜிபி வீட்டில் தேக்கு நாற்காலியை திருடிச்சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக முன்னாள் டி.ஜி.பி. ராமச்சந்திரனுக்கு சென்னையில் வீடு உள்ளது. இந்த வீட்டில் இவரது தாயார் மட்டும் வசித்து வருகிறார். கடந்த 28ஆம் தேதி இவர்களின் வீட்டுக்கு வந்த பழைய பேப்பர் வியாபாரி ஒருவர் பேப்பர் இருக்கிறதா ? என கேட்டுள்ளார். ஆனால் பழைய பேப்பர் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. அப்போது கிளம்பிய அவர் வீட்டின் வராண்டாவில் இருந்த தேக்கு நாற்காலியை திருடிச் சென்றார். 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த தேக்கு நாற்காலியை தன் இருசக்கர வாகனத்தில் அவர் கொண்டு சென்றுள்ளார். இதையடுத்து கர்நாடகத்தில் இருந்து வந்த ராமச்சந்திரன் நாற்காலி குறித்து கேள்வி எழுப்பவே, அவரது தாயார் நடந்த சம்பவத்தை கூறி உள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு நாற்காலியை திருடிச் சென்ற முத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்