"மனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது" - வைகோ

மாநிலங்களவை தேர்தலில், வைகோவின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.
மனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்தது - வைகோ
x
திமுக கூட்டணி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வைகோ வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதனிடையே தேசத் துரோக வழக்கில் அவருக்கு ஓராண்டு தண்டனை விதிக்கப்பட்டதால், அவரது மனு ஏற்கப்படுமா என்ற சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற வேட்புமனு பரிசீலனையின் போது, வைகோவின் மனு ஏற்கப்பட்டது. இதுதொடர்பாக, சுயேட்சைகள் மற்றும் எந்த அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே செய்தியாளர்களை சந்தித்த வைகோ, தமது வேட்புமனு ஏற்கப்படும் என்ற நம்பிக்கை இருந்ததாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்