வைகோ மீது அவதூறு வழக்கு : விசாரணை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு

தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
வைகோ மீது அவதூறு வழக்கு : விசாரணை ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தமிழக அரசு 2006 ஆம் ஆண்டு தொடர்ந்த அவதூறு வழக்கில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இன்று சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.  மதிமுகவை உடைக்க அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி முயற்சி செய்கிறார் என அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு எழுதிய கடிதத்தின் அடிப்படையில் வைகோ மீது அப்போதைய தமிழக அரசு அவதூறு வழக்கு தொடர்ந்தது. சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், நடைபெற்று வரும் அந்த வழக்கு விசாரணைக்காக, வைகோ நேரில் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி சாந்தி, விசாரணையை ஜூலை 15 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்