"தமிழகத்தில் கால்நடை மருத்துவர் தேவை அதிகமாக உள்ளது" - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கால்நடை மருத்துவர் தேவை அதிகமாக உள்ளதாக சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கால்நடை மருத்துவர் தேவை அதிகமாக உள்ளது -  அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
x
தமிழகத்தில் கால்நடை மருத்துவர் தேவை அதிகமாக உள்ளதாக சட்டப்பேரவையில் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தற்காலிக அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்ட 850 கால்நடை மருத்துவர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 6 லட்சம் விலையில்லா ஆடுகள், 2 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு தலா 25 கோழிக்குஞ்சுகள், 12 ஆயிரம் பேருக்கு விலையில்லா கறவை பசுக்கள் ஆகியவை நடப்பாண்டில் வழங்கப்பட உள்ளதாகவும் உடுமலை ராதாகிருஷ்ணன் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்