மது போதையில் தகராறு செய்த காவலருக்கு அடி...

மது போதையில் தகராறு செய்த காவலரை, பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர்.
மது போதையில் தகராறு செய்த காவலருக்கு அடி...
x
மது போதையில் தகராறு செய்த காவலரை, பொதுமக்கள் அடித்து உதைத்துள்ளனர். சேலம் மாவட்டம், ஜான்சன் பேட்டையை சேர்ந்த மணிகண்டன், திருச்சியில் காவலராக பணி புரிந்து வருகிறார். சொந்த ஊருக்கு வந்திருந்த மணிகண்டன், நண்பர்களுடன், முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள மதுபான கடையில் மது அருந்தினார். அப்போது, நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது, மணிகண்டன், சாலையில் வந்து சென்றவர்களை, கண்மூடித்தனமாக தாக்கினார். இதனால், ஆத்திரமடைந்த பொது மக்களும், அப்பகுதியில் மது அருந்த வந்திருந்தவர்களும், காவலர் மணிகண்டனை சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த நகர காவல் துறையினர், மணிகண்டனை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று, விசாரணை மேற்கொண்டனர். 

Next Story

மேலும் செய்திகள்