ஜெயலலிதா வாழ்ந்ததால் கொடநாடு வீடும் கையகப்படுத்தப்படுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.
ஜெயலலிதா வாழ்ந்ததால் கொடநாடு வீடும் கையகப்படுத்தப்படுமா? - சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
x
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின், போயஸ் தோட்ட இல்லத்தை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்றுவது குறித்து, சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது.ஜெயலலிதாவுக்கு சொந்தமான 913 கோடி ரூபாய் சொத்துக்களை நிர்வகிக்க,  நிர்வாகியை நியமிக்க கோரி, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜெயலலிதாவின் போயஸ் தோட்டத்து இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தீபா, தீபக் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்தை, வெறும் 35 கோடி ரூபாய்க்கு எடுப்பதாக அரசு அறிவித்துள்ளதாக, தீபா மற்றும் தீபக் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், ஜெயலலிதாவின் பெயரை நிலைக்க செய்ய  பல வழிகள் இருக்கின்றதே என சுட்டிக்காட்டினர். அரசு பணத்தில் ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவு இல்லமாக  மாற்ற வேண்டியதன் அவசியம் என்ன? என்றும், ஜெயலலிதா வசித்தார் என்பதற்காக கொடநாடு எஸ்டேட் கையகப்படுத்தப்படுமா என்றும் கேள்வி எழுப்பினர். பின்னர், அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்