திருச்செந்தூரில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை - பால்குடம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு

உலக நன்மைக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் திரிசுதந்திரர்கள் சார்பில் பால்குடம் மற்றும் காவடி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
திருச்செந்தூரில் உலக நன்மைக்காக சிறப்பு பூஜை - பால்குடம் எடுத்து ஏராளமான பக்தர்கள் வழிபாடு
x
உலக நன்மைக்காக திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில், திரிசுதந்திரர்கள் சார்பில் பால்குடம் மற்றும் காவடி எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அப்பகுதியில் உள்ள சிவன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.அதனை தொடர்ந்து, அங்கிருந்து பெண்கள், சிறுவர்கள் உட்பட ஏராளமானோர் பால்குடம் எடுத்தும், சூரிய காவடி தூக்கியும், அலகு குத்தியும் ஊர்வலமாக சென்று சுப்ரமணிய சுவாமி கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் உலக நன்மைக்காகவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பூஜைகளை நடத்தினர். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்