நோயாளியை கழிவுநீர் பாதை அருகே படுக்க வைத்த மருத்துவமனை : தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் அவல நிலை

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கழிவுநீர் பாதை அருகே படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நோயாளியை கழிவுநீர் பாதை அருகே படுக்க வைத்த மருத்துவமனை : தேனி அரசு மருத்துவக் கல்லூரியின் அவல நிலை
x
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளி ஒருவர் கழிவுநீர் பாதை அருகே படுக்க வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு, தமிழகம் மட்டுமல்லாது, கேரளாவில் இருந்தும் நோயாளிகள், கர்ப்பிணிகள் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இந்த நிலையில் மதுரையை சேர்ந்த சங்கர் நாராயணன் என்பவர் ஒரு மாதத்துக்கு முன் பாம்பு கடி சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். உறவினர்கள்  யாரும் இல்லாததால் தனியாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, உடல் மற்றும் கை கால்களில் புண் ஏற்பட்டுள்ளது. அதற்கு சிகிச்கை அளித்த செவிலியர்கள், அவரை, கழிவு நீர் செல்லும் பாதை அருகே படுக்க வைத்ததாகக் கூறப்படுகிறது. அவரது நிலையை கண்டு பரிதாபப்பட்ட மக்கள், மருத்துவர்களிடம் சொல்லியும் நடவடிக்கை இல்லை என அதிருப்தி அடைந்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்