ஈரோடு : யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
ஈரோடு : யானை தாக்கியதில் முதியவர் படுகாயம்
x
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி நெய்தாளபுரம் கிராமத்தில் யானை தாக்கியதில் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அவரை உறவினர்கள் இருவர் இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை காட்டுயானை வழிமறித்து தாக்கியுள்ளது. மற்ற இருவரும் யானையிடம் இருந்து தப்பிய நிலையில், யானை தும்பிக்கையால் தாக்கியதில் படுகாயமடைந்த முதியவர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்