விருதுநகர் : வீட்டின் மாடிப்படி உடைந்து விழுந்து விபத்து : 4 வயது சிறுவன் படுகாயம்

விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது, வீட்டின் மாடிப்படி உடைந்து மேலே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் : வீட்டின் மாடிப்படி உடைந்து விழுந்து விபத்து : 4 வயது சிறுவன் படுகாயம்
x
விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது, வீட்டின் மாடிப்படி உடைந்து மேலே  விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், மணிநகரில் வாடகை வீட்டில் வசித்து வரும் மைக்கேல்ராஜ் - ஜான்சிராணி தம்பதியரின் இரண்டு குழந்தைகள் , வீட்டின் மாடிப்படிக்கு கீழே சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மாடியின் படிக்கட்டு அவர்கள் மீது உடைந்து விழுந்ததில், ஜோஸ் என்ற நான்கு வயது சிறுவனுக்கு தலை மற்றும் கால்களில் படு காயம் ஏற்பட்டது. இதில் மித்ரன் என்ற சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், வீட்டின் உரிமையாளர் வீட்டை முறையாக பராமரிக்காததே விபத்திற்கான காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்