குடிபோதையில் மின்னல் வேகத்தில் கார் ஓட்டி விபத்து : சினிமா பாணியில் சாலையில் புரண்டு விழுந்த கார்

நள்ளிரவில் குடிபோதையில் மின்னல் வேகத்தில் கார் ஒட்டி, சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு, ஒருவர் ஏற்படுத்திய விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடிபோதையில் மின்னல் வேகத்தில் கார் ஓட்டி விபத்து : சினிமா பாணியில் சாலையில் புரண்டு விழுந்த கார்
x
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து பாரீஸை நோக்கி அதி வேகத்தில் வந்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது. அப்போது திரைப்பட சண்டை காட்சிகளில் கார்கள் புரண்டு கீழே விழுவது போல், அந்த கார் விபத்தில் சிக்கியது. அங்கிருந்த போலீசாரும், பொதுமக்களும் உடனடியாக விரைந்து சென்று காரில் இருந்தவரை மீட்டனர். காரை, சாலை ஓரமாக தள்ளி நிறுத்தினர். காரை ஓட்டியவர், மண்ணடியை சேர்ந்த ஷாகுல் என்றும், அவர் குடிபோதையில் இருந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்ததது. இதனையடுத்து ஷாகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்