நாகர்கோவிலில் காரை கடத்திய கும்பல் : ஜி.பி.எஸ். உதவியுடன் மடக்கி பிடித்த போலீசார்
பதிவு : ஜூலை 08, 2019, 08:16 AM
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் ஓட்டுநரை கட்டி போட்டு காரை கடத்திய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் கோணம் பகுதியை சேர்ந்த சஜின்ராஜ். வாடகை கார் ஓட்டி வருகிறார். இந்நிலையில், காரை தனது வீட்டு முன் நிறுத்தி விட்டு வீட்டிற்குள் சஜின்ராஜ் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென வீட்டிற்குள் புகுந்த 5 இளைஞர்கள் சஜின்ராஜை தாக்கி கயிறால் கட்டி விட்டனர். பின்னர் வீட்டின் முன்பு இருந்த காரை கடத்தி சென்றனர். அண்டை வீட்டு இளைஞர் சஜின்ராஜை தேடி வந்தபோது அவர் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டார். கயிறை அவிழ்த்த பின் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து  காரில் பொருத்தப்பட்ட ஜிபிஎஸ் உதவியுடன் கார் கேரளா நோக்கி சென்று கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, தக்கலை போலீசார் மூலம் காரை வழிமறித்து 5 பேரையும் கைது செய்ததுடன் காரையும் பறிமுதல் செய்தனர். போலீசாரின் விசாரணையில், காரை திருடிய கும்பல், நாகர்கோவில் வட்டாரத்தை சேர்ந்தவர்கள் என்பதும் பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பதும் தெரிய வந்தது

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

6673 views

ஸ்டெர்லைட்டை திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி - ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் தங்கமணி பதில்

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்த உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவையில் மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

1571 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

4741 views

பிற செய்திகள்

நெல்லை : காரும், பேருந்தும் மோதி விபத்து - 5 பேர் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் பத்தமடை அருகே காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி கொண்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

55 views

ராமநாதபுரம் : விறுவிறு மஞ்சுவிரட்டு - மல்லுக்கட்டிய வீரர்கள்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பெருநாழியில் வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றது.

4 views

கிருஷ்ணகிரி : கண்காட்சியில் கவர்ந்த நாய்களின் சேட்டை

கிருஷ்ணகிரியில் நடைபெறும் 27-வது அரசு அகில இந்திய மாங்கனி கண்காட்சி விழாவின் ஒருபகுதியாக கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் செல்ல பிராணிகளுக்கான கண்காட்சி நடைபெற்றது.

19 views

காஷ்மீர் : போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த சிறப்பு நிகழ்ச்சி

போதை பொருளுக்கு பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அடிமையாவது காஷ்மீரில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

11 views

அமிர்தசரஸில் டர்பன் அணியும் போட்டி - அசத்திய இளைஞர்கள்

சீக்கியர்களின் அடையாளம், டர்பன் என அழைக்கப்படும் அவர்களின் தலைப்பாகை., டர்பனை அழகாகவும், வேகமாகவும் அணியும் போட்டி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடைபெற்றது.

14 views

ஹாங்காங்கில் நாளுக்கு நாள் தீவிரமடையும் போராட்டம்

நாடு கடத்தும் சட்ட மசோதாவுக்கு எதிரான போராட்டம் ஹாங்காங்கில் தீவிரமடைந்துள்ளது.

33 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.