புலியை கூண்டில் அடைத்தாலும் சீறிக்கொண்டேதான் இருக்கும் - வைகோ

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனது உயிர் உள்ளவரை பேசிக் கொண்டேதான் இருப்பேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
புலியை கூண்டில் அடைத்தாலும் சீறிக்கொண்டேதான் இருக்கும் -  வைகோ
x
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தனது உயிர் உள்ளவரை பேசிக் கொண்டேதான் இருப்பேன் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஈழத் தமிழர் இனப்படுகொலை பத்தாம் ஆண்டு நினைவேந்தல் மாநாடு நடைபெற்றது. இதில் உரையாற்றிய வைகோ, புலியை கூண்டில் அடைத்தாலும் அது சீறிக் கொண்டேதான் இருக்கும், குயிலை கூண்டில் அடைத்தாலும் அது பாடிக் கொண்டே தான் இருக்கும் என்றார். இந்தியா ஒரு நாடு அல்ல, ஒரு உப கண்டம் என்றும், இந்தக் கருத்தை சொன்னால் தேச துரோக வழக்கு தண்டனை என்றால் பேசிக் கொண்டுதான் இருப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்