மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்

மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுத்தாக்கல்
x
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். அ.தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் முகமது ஜான், மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் போட்டியிடுவார்கள் என, அறிவிக்கப்பட்டது. இதேபோல், கூட்டணியில் பா.ம.க.-வுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், மூவரும் சட்டப்பேரவை செயலாளரும், தேர்தல் அதிகாரியுமான சீனிவாசனிடம் இன்று  வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்