சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

அத்திவரதர் கோயிலுக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக்கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சாலை விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
x
ராணிப்பேட்டை அடுத்த செட்டிதாங்கல் பகுதியை சேர்ந்த தம்பதியினர் இளம்பருதி - சரஸ்வதி. இவர்கள் இருவரும் தங்கள் 9 வயது மகனுடன் இரு சக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் அத்தி வரதர் கோயிலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சுமைதாங்கி என்ற இடத்தில் வந்த போது இவர்கள் வந்த இருசக்கர வாகனம், சாலையை கடக்க முயன்ற காளிமுத்து என்பவர் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரும், வாகனம் மோதி படுகாயம் அடைந்த காளிமுத்துவும் உயிரிழந்தனர். கோயிலுக்கு  சென்று விட்டு ஊர் திரும்பிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்