ஆட்டோவில் வந்து கொள்ளை : காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி

சென்னை வளசரவாக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவன மேலாளர் ரீகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
ஆட்டோவில் வந்து கொள்ளை : காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சி
x
சென்னை வளசரவாக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு தனியார் நிறுவன மேலாளர் ரீகன் என்பவர் வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல பல வீடுகளில், பின் பக்க கதவு உடைக்கப்பட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றது.  இதையடுத்து தனிப்படை அமைத்து, போலீசார் கொள்ளையர்களை தேடி வந்தனர். அப்போது கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்ததில் சம்பவம் நடந்த இடங்களில் ஆட்டோவில் வரும் மர்ம நபர் பூட்டி இருக்கும் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்தது தெரியவந்தது.  இதையடுத்து விருகம்பாக்கத்தை சேர்ந்த கார்த்திக்கை போலீஸார் கைது செய்து விசாரித்ததில், ஆட்டோவில் சென்று திருடினால் யாருக்கு சந்தேகம் வராது என்பதால் இதுபோல் நூதன முறையில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து  36 சவரன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்