பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்யும் கமுதி விவசாயி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், பலரும் தங்களிடம் உள்ள ஆடு - மாடுகளை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது.
பண்ணை குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்யும் கமுதி விவசாயி
x
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதால், பலரும் தங்களிடம் உள்ள ஆடு - மாடுகளை விற்பனை செய்து விட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மேலச்சிறுபோது கிராமத்தை சேர்ந்த விவசாயி முகமதுரபி, பறவைகள் மற்றும் விலங்குகளுக்காகவே பண்ணைக்குட்டை அமைத்து தண்ணீர் தானம் செய்து வருகிறார். கமுதி சுற்றுவட்டார பகுதிகளில் வளர்க்கப்பட்டு வரும் ஆடு, மாடுகளின் தண்ணீர் தேவையை இந்த பண்ணைக்குட்டை பூர்த்தி செய்து வருகிறது. தினமும் அந்த குட்டையில், 5 ஆயிரம் ஆடு, மாடுகள் நீர் அருந்தி செல்கின்றன என்று முகமதுரபி தெரிவித்தார். இதே போல், காட்டுப்புறா, மைனா, காகம், மயில் உள்ளிட்ட பறவைகளும் அந்த பண்ணைக்குட்டை மூலம் தாகத்தை தீர்த்து கொள்கின்றன.சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தமது பண்ணை குட்டையை பயன்படுத்தி வருவது, மனநிறைவை தருவதாக விவசாயி முகமதுரபி தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்