நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் பங்கேற்பு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார்.
நலத்திட்ட உதவிகள் - அமைச்சர்கள் பங்கேற்பு
x
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் நலனைவிட தனது குடும்பத்தின் நலனில் தான் அதிக அக்கறை செலுத்துகிறார் என்று கூறினார்.  

இதேபோல திண்டுக்கல்லில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் மடிக்கணினி வழங்கும் விழாவில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பங்கேற்றார். விழாவில் பேசிய அவர், தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக கூறினார். 

கடலூரில் அமைச்சர் எம்.சி.சம்பத் புதிய அரசு பேருந்துகளை தொடங்கி வைத்தார். அவருடன் மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உள்ளிட்ட அரசு அதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்றனர். கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து ஜெயம்கொண்டம், விருத்தாச்சலம் வழியாக அரியலூர், சென்னை ஆகிய பகுதிகளுக்கு அரசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்