சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பழனியில் விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில், போலீசார் பழனியில் ஜம்பொன் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பழனியில் விசாரணை : பழனி சிலை தொடர்பான ஆவணங்கள் ஆய்வு
x
திண்டுக்கல் மாவட்டம் பழனி கோவிலில் ஐம்பொன் சிலை செய்ததில் முறைகேடு நடந்ததாக,  ஸ்தபதி முத்தையா அளித்த​வாக்கு மூலம் அடிப்படையில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணையை துவக்கினர்.  முறைகேடு  ஸ்தபதி முத்தையா, இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், பழனி கோவில் முன்னாள் இணை ஆணையர் ராஜா உள்ளிட்ட பலரிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கடந்த ஆண்டு ஜூனில் பழனி கோவிலில் பூட்டி வைக்கப்பட்டிருந்த ஐம்பொன் சிலையை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான போலீசார் சனிக்​கிழமை, பழனியில் சிலை தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியை தொடங்கி உள்ளனர். பழனி பயணியர் விடுதியில். அறநிலையத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர். 2 நாட்கள்  விசாரணை மேற்கொள்ளப்படும் எனஅதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், பழனியில் பரபரப்பு நிலவுகிறது.

Next Story

மேலும் செய்திகள்