ராஜபாளையம் : 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் உறவினர் கைது
பதிவு : ஜூலை 06, 2019, 02:26 PM
ராஜபாளையம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம் அருகே 10 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரை, போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் தளவாய்புரத்தில் உள்ள செங்கல்சூளையில் ஓட்டுநராக பணிபுரிபவர் சுரேஷ்குமார். இவரது உறவினரின் மகள், அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று அப்பள்ளிக்கு சென்ற சுரேஷ்குமார், உதவி தொகை பெற புகைப்படம் எடுக்க, மாணவியை தன்னுடன் அனுப்புமாறு தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளார். அவர் மறுப்பு தெரிவிக்கவே, அதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் தனது உறவினர் உதவியுடன் மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். அதனை தொடர்ந்து அருகிலுள்ள காட்டுப் பகுதிக்கு மாணவியை அழைத்துச் சென்று தவறான முறையில் நடக்க முயற்சித்ததுடன், செல்போனில் படம் எடுத்தும் மாணவியை மிரட்டியுள்ளார். அவரிடமிருந்து இருந்து தப்பி, வீட்டிற்கு வந்த மாணவி, உறவினர்களிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். மாணவியின் தாயார் அளித்த புகாரின் பேரில் மகளிர் காவல்நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சுரேஷ்குமாரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

16 வயது சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் -வீட்டு வேலைக்கு அழைத்து சென்ற பெண் கைது

காஞ்சிபுரம் அருகே, வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற 16 வயது சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில், வேளாங்கண்ணி என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

350 views

பிற செய்திகள்

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் அனுசரிப்பு

இலங்கை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நாள் அனுசரிக்கப்பட்டது.

10 views

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2,500 ஆண்டு பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

கிருஷ்ணகிரி அருகே சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகள் பழமையான கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

22 views

புதுச்சேரியில் வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற வேம்படி அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

8 views

டி.என்.பி.எல். கிரிக்கெட் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திருச்சி வாரியர்ஸை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வெற்றிபெற்றது.

12 views

சித்தூர் அருகே அரசு பேருந்து - கார் நேருக்கு நேர் மோதல் - சென்னையை சேர்ந்த 4 பேர் பலி

ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்ட விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.

36 views

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு

பிரிட்டனின் புதிய பிரதமாராக போரிஸ் ஜான்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.