சென்னை : ரூ.2.40 லட்சம் லஞ்சம் : டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் மீது வழக்குப் பதிவு

சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை : ரூ.2.40 லட்சம் லஞ்சம் : டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் மீது வழக்குப் பதிவு
x
சென்னை அண்ணாசாலையில் உள்ள டாஸ்மாக் மூத்த மண்டல மேலாளர் உட்பட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் அடிக்கடி சோதனை நடத்தாமல் இருக்கவும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் நோக்கிலும் லஞ்சம் கொடுக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் கடந்த பிப்ரவரி மாதம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், இரண்டு லட்சத்து நாற்பது ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதற்கான பல்வேறு ஆதாரங்கள் சிக்கின. இதைத் தொடர்ந்து மூத்த மண்டல மேலாளர் முத்துகுமாரசாமி உள்ளிட்ட 13 பேரிடம், லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை துவக்கியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்