அரசு பள்ளியில் மாணவர் பேரவைத்தேர்தல்... பொதுத்தேர்தல் போல நடந்த மாதிரி தேர்தல்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே, அரசு பள்ளி ஒன்றில் பொதுத்தேர்தல் போல மாணவர்களிடையே பேரவை தேர்தல் நடந்துள்ளது.
அரசு பள்ளியில் மாணவர் பேரவைத்தேர்தல்... பொதுத்தேர்தல் போல நடந்த மாதிரி தேர்தல்
x
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே, அரசு பள்ளி ஒன்றில் பொதுத்தேர்தல் போல மாணவர்களிடையே பேரவை தேர்தல் நடந்துள்ளது. பொதுத்தேர்தல் போல இந்த தேர்தலில் மாணவர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். ஈரோடு, பவானிசாகர் கோடேபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 190 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மாணவர்கள் பொதுத்தேர்தல் நடைமுறை குறித்து அறிந்து கொள்ளும் வகையில், மாணவர் பேரவைத் தேர்தல் ஒன்றை நடத்த ஆசிரியர்கள் முடிவு செய்தனர். இதையடுத்து பொதுத்தேர்தல் போல அனைத்து நடைமுறைகளும் இந்த தேர்தலிலும் பின்பற்றப்பட்டது. முதலில் வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டது. பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு,  போட்டியிட விரும்பும் மாணவர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து, மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர். 

இதைத்தொடர்ந்து வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு, பூத் ஸ்லிப் வழங்கப்பட்டது. இதையடுத்து, கைவிரலில் மை வைக்கப்பட்ட பின் வழங்கப்பட்ட வாக்குச்சீட்டில் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான சின்னத்திற்கு முத்திரையிட்டு, பெட்டியில் போட்டனர். இந்த தேர்தலில் 93 சதவிகித வாக்குகள் பதிவானதை அடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்பட்டது. பொதுத்தேர்தல் போல இந்த தேர்தல் நடத்தப்பட்டதால், மாணவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்