குடிசை மாற்று வாரிய வீடுகளில் விரிசல் : புதிய வீடுகளில் விரிசல்... வெளியேறாத கழிவு நீர்

1979ம் ஆண்டு தண்டையார் பேட்டை சேனியம்மன் கோயில் பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் 35 ஆண்டுகள் பழையதாகின.
x
1979ம் ஆண்டு  தண்டையார் பேட்டை சேனியம்மன் கோயில் பகுதியில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய வீடுகள் 35 ஆண்டுகள் பழையதாகின. இதைத் தொடர்ந்து, கடந்த 2018ஆம் ஆண்டு பழைய வீடுகளை இடித்துவிட்டு 44 கோடி ரூபாய் செலவில், 464 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. கட்டி முடித்து ஓராண்டே ஆன நிலையில், வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு, சிமெண்ட் கொட்டுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர். கழிவு நீர் குழாய்கள் கசிவதன் மூலம் கட்டட சுவர் ஈரப்பதத்துடன் இருப்பதாக அவர்கள் தெரிவிக்கின்றனர். பராமரிப்பு பணிக்காக 250 ரூபாயும், வாடகையாக 250 ரூபாயும் என, ஆண்டுக்கு 14 லட்ச ரூபாய் பராமரிப்புக்காக வசூலிக்கப்படுகிறது. இதுவரை எந்தவித பணிகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், சொந்த செலவில், குடிநீர் தேவையை நிறைவு செய்துகொள்வதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்