ரூ.40 ஆயிரம் ஆன்லைனில் பணம் செலுத்தி இழந்த கல்லூரி மாணவி : பிரியாணி ஆர்டர் செய்து ஏமாற்றம்

சென்னையில் போலி சேவை மையத்தின் மூலம், கல்லூரி மாணவி ஒருவர் 40 ஆயிரம் ரூபாய் வரை ஏமாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரூ.40 ஆயிரம் ஆன்லைனில் பணம் செலுத்தி இழந்த கல்லூரி மாணவி   : பிரியாணி ஆர்டர் செய்து ஏமாற்றம்
x
சென்னை சௌகார்பேட்டையை சேர்ந்த ப்ரியா என்ற கல்லூரி மாணவி, பிரபல உணவு ஆர்டர் நிறுவனத்தின் செயலி மூலம் 76 ரூபாய்க்கு சலுகை விலையில் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். பின்னர் ஆர்டர் திடீரென ரத்தாகிய நிலையில் ப்ரியா ஆன்லைன் மூலம் செலுத்திய பணம் திரும்ப வரவில்லை. இதையடுத்து இணைய தளம் மூலம் அந்த நிறுவனத்தின் சேவை மைய எண்ணை கண்டுபிடித்து தொடர்பு கொண்ட போது, வெறும் 76 ரூபாயை ஆன்லைனில் திருப்பி தர முடியாது என்றும் 5 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் மொத்தமாக 5 ஆயிரத்து 76 ரூபாயாக ஆன்லைனில் வரவு வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி அந்த பெண் 5 ஆயிரம் ரூபாயை சேவை மையத்தில் தெரிவிக்கப்பட்ட எண்ணுக்கு ஆன்லைனில் செலுத்தியுள்ளார். அந்த பணம் வரவில்லை என்று சேவை மையத்தில் இருந்தவர் தெரிவித்ததால் ப்ரியா மீண்டும் மீண்டும் பணம் அனுப்பியதால் அவரது வங்கி கணக்கில் இருந்து 40 ஆயிரம் ரூபாய் குறைந்துள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ப்ரியா வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பலமுறை எச்சரித்தும் ஆன்லைனில் பணம் செலுத்தி பலர் ஏமாறுவது தொடர் கதையாகி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்