தி.மு.க.வின் இளைஞரணி செயலாளராகிறார் உதயநிதி

உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
x
உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. இளைஞரணி தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உதயநிதி தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான  முரசொலியின் நிர்வாக இயக்குநராக பதவி வகித்து வருகிறார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். சமீபகாலமாக கூட்டணி குறித்து தனது கருத்துகளை  வெளிப்படையாக மேடைகளில் உதயநிதி பேசி வந்தார். இந்த  நிலையில் அவர் நேரடியாக அரசியலில் களம் இறங்க உள்ளதாகவும் அவருக்கு திமுக இளைஞரணி தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்