நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை

காஞ்சிபுரத்தில், அத்திவரதர் வைபவம் நடைபெற்று வரும் நிலையில், நகருக்குள், ஆட்டோ ஓட்ட போலீஸ் அனுமதி மறுத்ததாக கூறி, ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
நகருக்குள் ஆட்டோ ஓட்ட போலீஸ் மறுத்ததாக கூறி ஆட்டோ ஓட்டுநர் தீக்குளித்து தற்கொலை
x
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் உற்சவம் நடைபெற்று வருவதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தடுக்கும் வகையில், நகருக்குள் உரிய அனுமதி பெறாத வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை  என கூறப்படுகிறது. இதனால் வருமானம் இன்றி தவித்த ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ச்சியாக போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில்,  குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர், புதிய அனுமதி அட்டை பெற்றிருந்தும் காஞ்சிபுரம் நகர்ப் பகுதிக்குள் ஷேர் ஆட்டோவை ஓட்ட போலீஸார் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர்,  காஞ்சிபுரம் முத்தியால்பேட்டை பகுதியில் சாலையின் நடுவே உடலில் பெட்ரோலை ஊற்றி கொண்டு போலீசாரின் கண் முன்னே தீக்குளித்தார். இதனையடுத்து பொதுமக்களும், அங்கு காவல் பணியில் ஈடுபட்டு இருந்த போலீசாரும் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.  ஆனால் படுகாயம் அடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜாபாத் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் .

Next Story

மேலும் செய்திகள்