சென்னை : கட்டிட தொழிலாளர்களின் செல்போன், பணம் திருட்டு

சென்னையில் கட்டிட தொழிலாளர்களிடம் செல்போன் மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை : கட்டிட தொழிலாளர்களின் செல்போன், பணம் திருட்டு
x
சென்னையில் கட்டிட தொழிலாளர்களிடம் செல்போன் மற்றும் பணம் திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். அபிராமிபுரம் ரயில் நிலையம் அருகே கட்டிட வேலை நடைபெற்று வருகிறது. அங்கு கொல்கத்தாவை சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு நுழைந்த மர்ம நபர்கள் இருவர் 5 செல்போன்களையும், 30 ஆயிரம் பணத்தை திருடிக்கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர். அவர்களை தடுத்த காவலாளியை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிசென்றனர். 

Next Story

மேலும் செய்திகள்