வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் செல்ல தடை : காவல்துறைக்கு கண்டனம்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு இயல்பாக செல்ல காவல்துறை அனுமதிக்காததை கண்டித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர்.
வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் செல்ல தடை : காவல்துறைக்கு கண்டனம்
x
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மாட வீதிகளில் வசிக்கும் மக்கள், தங்கள் வீடுகளுக்கு இயல்பாக செல்ல காவல்துறை அனுமதிக்காததை கண்டித்து கருப்புக் கொடிகளுடன் போராட்டம் நடத்தினர். வரதராஜ பெருமாள் கோவிலில் அத்தி வரதர் வைபவம் நடைபெற்று வருவதால் வீதிகளில் காவல்துறை தடுப்பு வைத்து, உள்ளே செல்ல முடியாமல் அனுமதி மறுத்து வருவதாகவும், இது தங்களின் இயல்பான வாழ்விற்கு இடையூறாக இருப்பதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாட்டினர். இந்நிலையில் இதை கண்டித்து மாடவீதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் கருப்புக்கொடி ஏந்தி காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சார் ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.  

Next Story

மேலும் செய்திகள்