அத்தி வரதர் உற்சவம் - காஞ்சிபுரத்தில் திடீர் மழை

கொட்டும் மழையை பெருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்தனர்.
அத்தி வரதர் உற்சவம் - காஞ்சிபுரத்தில் திடீர் மழை
x
காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் திருக்கோவிலில் அனந்த சரஸ் திருக்குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை எடுக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று பக்தர்களின் தரிசனத்திற்காக 24 நாட்கள் சயன கோலத்திலும், 24 நாட்கள் நின்ற கோலத்தில் காட்சி அளிப்பார். சிறப்பு மிக்க அத்திவரதர் உற்சவம் 40 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று முன்தினம் தொடங்கியது. காலை முதல், மாலை வரை ஏராளமான பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்து வந்த நிலையில்  நேற்று மாலை காஞ்சிபுரத்தில் திடீரென மழை கொட்டத் தொடங்கியது. ஆனால் மழையையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் சென்றனர். முதல் நாளான நேற்று முன்தினம் ஒரு லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்திருந்த நிலையில் இரண்டாம் நாளான நேற்று 50 ரூபாய் சிறப்பு கட்டணம் ரத்து செய்யப்பட்ட நிலையில் பொது தரிசனத்தில் 80ஆயிரம் பக்தர்கள் அத்திவரதரை தரிசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்