துறை வாரியான நிதி ஒதுக்கீடு எவ்வளவு..?

பட்ஜெட் ஒதுக்கீடுகளில் விவசாயத் துறைக்கான ஒதுக்கீடுகள் கடந்த இடைக்கால பட்ஜெட்டில் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதை நிர்மலா சீதாராமன் உறுதிபடுத்துவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் குறித்து ஒரு பார்வை...
x
நடப்பு நிதியாண்டில் ஓய்வூதியமாக 1 லட்சத்து 74 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 1 லட்சத்துக்கு 66 ஆயிரத்து 618 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இந்த ஆண்டு பாதுகாப்புத் துறைக்கு 3  லட்சத்து 5 ஆயிரத்து 296 கோடி ரூபாயும், கடந்த ஆண்டில்  2 லட்சத்து 85 ஆயிரத்து 423 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

விவசாயத் துறைக்கு நடப்பு நிதியாண்டில் 1 லட்சத்து 49 ஆயிரத்து 981 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இது கடந்த ஆண்டில் 86 ஆயிரத்து 602 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வணிகம் மற்றும் தொழில் துறைக்கு நடப்பு ஆண்டில் 27 ஆயிரத்து 660 கோடி ரூபாயும், கடந்த ஆண்டில் 28 ஆயிரத்து 394 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது.

2018 ல் கல்வித் துறைக்கு 83 ஆயிரத்து 626  கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், நடப்பாண்டில் 93 ஆயிரத்து 848 கோடி ஒதுக்கப்பட்டது. சுகாதாரத் துறைக்கு கடந்த ஆண்டில் 55 ஆயிரத்து 949 கோடி ஒதுக்கிய நிலையில், நடப்பு நிதியாண்டில் 63 ஆயிரத்து 538 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வட்டி செலுத்துவதற்கான கடந்த ஆண்டில் 5 லட்சத்து 87 ஆயிரத்து 570 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில், நடப்பாண்டில் 6 கோடியே 65 லட்சத்து 61 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிராமப்புற மேம்பாடு திட்டங்களுக்கு 2018 ல் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 109 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில்,  நடப்பு நிதியாண்டில் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 962 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்புற வளர்ச்சிக்கு 2018 ஆம் ஆண்டில் 42 ஆயிரத்து 965 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில்,  நடப்பாண்டில் 48 ஆயிரத்து 32  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டில் 24 லட்சத்து 57 ஆயிரத்து 235 கோடி ரூபாய்  ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டு ஒதுக்கீடுகள் 27 லட்சத்து 84 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்