வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற சம்மதம் - சென்னை உயர் நீதிமன்றத்தில் லாரி உரிமையாளர்கள் சங்கம் தகவல்

எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
x
எல்.பி.ஜி. எரிவாயு சப்ளை செய்வதற்கான டேங்கர் லாரிகளுக்கான டெண்டரில் 5,500 லாரிகள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 4,800 லாரிகளுக்கு மட்டும் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.  மீதமுள்ள 700 லாரிகளுக்கும் ஒப்பந்தம் வழங்க  வலியுறுத்தி  இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்தது. இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட 3 பொதுத்துறை எண்ணெய்  நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில், லாரிகள் பணியின்றி நிறுத்தபட்டுள்ளதால் வங்கிக் கடனை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, முதலில் போராட்டத்தை வாபஸ் பெற்றால் மத்தியஸ்தரை நியமிப்பதாக தெரிவித்தார். இதையடுத்து போராட்டத்தை வாபஸ் பெறுவதாக லாரிகள் சங்கம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மத்தியஸ்தராக ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால் வசந்தகுமாரை நியமித்து உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்