குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் போராட்டம்

புத்தூர் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிநீர் தட்டுப்பாடு - பொதுமக்கள் போராட்டம்
x
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அடுத்த புத்தூர் கிராமத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 500க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஒருகுடம்10 ரூபாய்க்கு குடிநீர் வாங்கி பயன்படுத்துவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.இதேபோல், பிள்ளையார்நத்தம் ஊராட்சியை சேர்ந்த மக்கள், குடிநீர் கேட்டு திண்டுக்கல்-தேனி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், உடனடியாக தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வலியுறுத்தினர்.

திருத்தணி :

திருத்தணி அடுத்த நெமிலி கிராமத்தில் கடந்த 2 மாதங்கள் முறையாக குடிநீர் வழங்காததை கண்டித்து, காலிக் குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகளை சிறைபிடித்த அவர்கள் உடனடியாக தண்ணீர் வழங்க வலியுறுத்தினர். 

கீராப்பாளையம், சிதம்பரம் :

சிதம்பரம் அருகே கீராப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் முற்றுகையிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், உடனடியாக தண்ணீர் வழங்குவது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்