கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவி கொலை

கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவியை தாயே கொலை செய்து கிணற்றில் வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது.
கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த 11ம் வகுப்பு மாணவி கொலை
x
கணவன் இறந்த நிலையில், 34 வயதாகும் அவரது மனைவி மஞ்சுஷா, தமது மகளுடன் தனியாக வசித்து வந்தார். தனியாக வாடகை வீட்டில் இருந்த அவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அனீஷ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு நீடித்த நிலையில், விடுமுறைக்கு வந்த மகள், தாய் ஆண் ஒருவருடன் தனிமையில் இருந்ததை பார்த்துவிட்டார். இதை மறைப்பதற்காக கள்ளக் காதலன் அனீசுடன் சேர்ந்து கொலை செய்து தப்பிவிட்டனர். பாட்டி அளித்த புகாரின் பேரில், கன்னியாகுமரியில் கள்ளக் காதலனுடன் தங்கியிருந்த தாயை பிடித்த போலீசார் நடத்திய விசாரணையில், அந்தரங்க வாழ்வு அம்பலமானதால், மகளை கொன்றதாகவும், தற்கொலை போல் மறைத்துவிட எண்ணி,  கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர். மகள், காதலனுடன் ஓடிவிட்டதாக பாட்டியிடம் கூறிவிட்டு, வெளியேறியதும் அம்பலமானது. கிணற்றில் இருந்து பெண்ணின் உடலை எடுத்து பரிசோதித்ததில், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட பதைபதைக்கும் தகவல் தெரியவந்தது. கைதான கொலைகார தாய் மற்றும் கள்ளக் காதலன் அ​னீஷ் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்