மாநகர பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் : சென்னையில் பேருந்து சேவைகள் பாதிப்பு

சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
x
சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சென்னையில் பேருந்து சேவை பாதிக்கப்பட்டு உள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 60 சதவீதம் மட்டுமே இம்மாதம்  சம்பளம் வழங்கப்பட்டதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து இன்று அதிகாலை முதல் பெரும்பாலான பணிமனைகளில் இருந்து பேருந்துகளை இயக்காமல் ஓட்டுனர், நடத்துனர்கள் திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 36 பணிமனைகளில் இருந்து 3000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் சேம நல பணியாளர்களை கொண்டு குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இன்று மாலைக்குள் மீதம் 40 சதவீதம் சம்பளம் வழங்கப்படும் என நிர்வாக தரப்பில் முன் வந்துள்ளதாகவும, அதன் பிறகே அடுத்தக்கட்ட முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

"பேருந்துகளை இயக்காததால் பாதிப்பு - பயணிகள் கருத்து"



மாநகர பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் : "பேருந்துகளை இயக்க ஓட்டுநர்கள் மறுப்பு"



"மாநகர பேருந்து ஓட்டுநர்கள் போராட்டம் : கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்" - நடராஜன், தொ.மு.ச


Next Story

மேலும் செய்திகள்