புதிய ஒப்பந்த நடைமுறையால் லாரிகள் பணி இழப்பு : ஜூலை-1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்

புதிய ஒப்பந்த நடைமுறையால், பணியின்றி முடக்கப்பட்டிருப்பதை கண்டித்து நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக தென்னிந்திய எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
புதிய ஒப்பந்த நடைமுறையால் லாரிகள் பணி இழப்பு : ஜூலை-1 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம்
x
நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு இயங்கும் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள், ஒப்பந்த அடிப்படையில் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உள்ளிட்ட  சமையல் எரிவாயு நிறுவனங்களுக்கு அனுப்பி வருகிறது. இந்த நிறுவனங்கள் ஐயாயிரத்து 500 லாரிகளுக்கு ஒப்பந்தம் கோரிய நிலையில்,  நான்காயிரத்து 800-க்கு மட்டுமே பணி ஒப்பந்தம் வழங்கியது. ஏற்கனவே, இரண்டாயிரம் லாரிகள் பணி இல்லாமல் நிற்கும் நிலையில், புதிய ஒப்பந்த நடைமுறையால், மேலும் 700 லாரிகள் வேலை இழந்துள்ளன. இந்நிலையில், ஏற்கனவே திட்டமிட்டபடி, நாளை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என, தென்னிந்திய டேங்கர் லாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்