மருத்துவ படிப்பில் சமூக நீதியை நிலைநாட்ட நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் - ராமதாஸ்
நீட் தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீட் ரத்து செய்யப்பட்டால் தான் தமிழகத்தில் மருத்துவ படிப்பில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என்று கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நீட் தேர்வு நீடிக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் உச்சநீதிமன்றத்தால் கற்பிக்கப்படவில்லை என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Next Story

