காலம் பேசாது... ஆனால், எல்லாவற்றுக்கும் பதில் சொல்லும் - நடிகர் ரஜினிகாந்த்

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது.
x
பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா எழுதிய 'புறநானூறு புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா, சென்னை தியாகராய நகரில் நடைபெற்றது. இதில், அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுரை எம்.பி. வெங்கடேசன், திமுக எம்.பி. திருச்சி சிவா, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சாலமன் பாப்பையா எழுதியுள்ள  நூலை  இளைய தலைமுறையினர் படித்து பயனடைய வேண்டும் என கேட்டு கொண்டார். காலம் பேசாது, எல்லாவற்றுக்கும் காலம் தான் பதில் சொல்லும் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். 


Next Story

மேலும் செய்திகள்