தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை - அண்ணா பல்கலை. பதிவாளர் விளக்கம்

தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானது என பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.
தரமற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் வெளியிடப்படவில்லை - அண்ணா பல்கலை. பதிவாளர் விளக்கம்
x
தரமற்ற 89 பொறியியல் கல்லூரிகளின் பட்டியலை, அண்ணா பல்கலைக்கழகம்  வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் பரவும் செய்திகள் தவறானது என பதிவாளர் கருணாமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 89 கல்லூரிகள் தரமற்றவை என சமூக வலைதளத்தில் குறு​ஞ்செய்தி ஒன்று உலா வந்தது. இதனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்தநிலையில், தரமற்ற கல்லூரிகள் என்ற எந்த ஒரு பட்டியலையும் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என அதன் பதிவாளர் தெரிவித்துள்ளார். சமூக வலைதளத்தில் உலா வருவது தவறான தகவல் எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்