சிறுநீரகம் தானம் செய்தால் ரூ.3 கோடி : பிரபல மருத்துவமனை பெயரில் மோசடி
ஈரோட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனை பெயரில் போலியாக, சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது.
ஈரோட்டில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவமனை பெயரில் போலியாக, சமூக வலைதளங்கள் மற்றும் இணைய தளங்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. அதில் சிறுநீரகம் தானம் செய்வோருக்கு 3 கோடி ரூபாய் வழங்கப்படும் என்றும், அதற்கு முன்பணமாக 15 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
போலி விளம்பரம் என தெரியாமல், பலர் பணம் செலுத்தி விட்டு சம்பந்தப்பட்ட மருத்துவமனையை அணுகியுள்ளனர். ஆனால் தாங்கள் எந்த விளம்பரமும் தரவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் பணம் கட்டியவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட நைஜீரியர்கள் இருவரை கைது செய்தனர்.
Next Story
