அடிப்படை வசதி இல்லாமல் ஊரை காலி செய்யும் உச்சப்புளி கிராம மக்கள்...

சிவகங்கை மாவட்டம் உச்சப்புளி கிராமத்தில், 100 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், தற்போது 20 குடும்பங்களே உள்ளன.
அடிப்படை வசதி இல்லாமல் ஊரை காலி செய்யும் உச்சப்புளி கிராம மக்கள்...
x
சிவகங்கை மாவட்டம் உச்சப்புளி கிராமத்தில், 100 குடும்பங்கள் வசித்து வந்த நிலையில், தற்போது 20 குடும்பங்களே உள்ளன. இந்த கிராமத்தை சேர்ந்த பெரும்பாலான மக்கள் விவசாயிகளாகவும், கூலித் தொழிலாளர்களாகவும் உள்ள நிலையில், 10 ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் நிலங்கள் தரிசாகி வறட்சி நிலவுவதாக கூறப்படுகிறது. ஊரணியையும் துார்வாராததால் குடிக்கவும் நீர் இல்லை என்றும், போதிய அடிப்படை வசதி இல்லாததால் ஏற்கனவே 80-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் ஊரை காலி செய்துவிட்ட நிலையில், தற்போது, 20 குடும்பங்கள் மட்டுமே கிராமத்தில் உள்ளதாக கூறுப்படுகிறது. தரமற்ற சாலை, அச்சத்தை ஏற்படுத்தும் மின்கம்பிகள் ஆகியவை ஏழு தலைமுறையாக வாழ்ந்த மக்கள் வெளியேற காரணமாக உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே கிராமத்தை மீண்டும் பழைய பொலிவுடன் மீட்டுக் கொண்டு வர வேண்டும் என்பதே கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்