அரசுப் பள்ளியில் வான் அறிவியல் தொழில்நுட்பக்காட்சி கூடம் - பயிற்சியாளரை நியமிக்க பெற்றோர், மாணவர்கள் கோரிக்கை

சேலம் மாவட்டம் புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் திறக்கப்பட்ட வான் அறிவியல் தொழில்நுட்பக்காட்சி கூடத்திற்கு பயிற்சியாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
x
எடப்பாடியை அடுத்த புதுப்பாளையம் அரசு நடுநிலைப்பள்ளி தனியார் பள்ளிக்கு ஈடாக அனைத்து வசதிகளுடன் இயங்கி வருகிறது. இந்திய அளவிலே முதல் முறையாக வான் அறிவியல் தொழில்நுட்பக்காட்சிக்கூடம், இந்தப் பள்ளியில் கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. ஆனால், பள்ளியின் தலைமை ஆசிரியைக்கும், ஆசிரியருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த வான் அறிவியல் ஆய்வகம் திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சமூக வலைத்தளத்தில் வெளியான தகவலை அடுத்து மாவட்ட கல்வி அதிகாரி ஆய்வு மேற்கொண்டு வான் அறிவியல் ஆய்வகத்தை திறக்க உத்தரவிட்டார். இதனை மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர். இருப்பினும் இந்தக்காட்சிக்கூடத்திற்கென்று கொண்டு வரப்பட்ட பொருட்கள் வெளியே எடுக்காமல் பெட்டியிலேயே அடைத்து வைத்து இருப்பதாகவும், இதற்கென்று ஒரு பயிற்சியாளரை நியமிக்க வேண்டும் என்று மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்