ரூ.5.80 கோடி சொத்து வரி நிலுவை - மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பி.என்.பட்டி பேரூராட்சி நோட்டீஸ்

மேட்டூர் அனல் மின் நிலையம் செலுத்த வேண்டிய 5 கோடியே 80 லட்ச ரூபாய் சொத்து வரி நிலுவையை செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ரூ.5.80 கோடி சொத்து வரி நிலுவை - மேட்டூர் அனல்மின் நிலையத்துக்கு பி.என்.பட்டி பேரூராட்சி நோட்டீஸ்
x
சேலம் மாவட்டம், பி.என்.பட்டி பேரூராட்சி எல்லைக்குட்பட்ட தொட்டில்பட்டி ஊராட்சியில் மேட்டூர் அனல் மின் நிலையம் ஆயிரத்து 733 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.1984 ஆம் ஆண்டில் இருந்து இயங்கி வரும் இந்த மின் நிலையம், ஆண்டுதோறும் சொத்து வரி செலுத்த வேண்டிய நிலையில், கடந்த 23 ஆண்டுகளாக  வரி நிலுவை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், நிலுவையில் உள்ள 5 கோடியே 80 லட்ச ரூபாயை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும், தவறினால் அனல் மின்நிலைய சொத்துகளை  பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்  என்றும் பி.என்.பட்டி பேரூராட்சி  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்