திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு வைக்கப்பட்டிருந்த துரோணா பாடசாலை என்ற பெயர் நீக்கம்

திருப்பூரில் மாநகராட்சி பள்ளிக்கு வைக்கப்பட்டிருந்த'துரோணா பாடசாலை'என்ற பெயர் பொதுமக்களின் எதிர்ப்பால் நீக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி பள்ளிக்கு வைக்கப்பட்டிருந்த துரோணா பாடசாலை என்ற பெயர் நீக்கம்
x
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் செயல்பட்டு வந்த மாநகராட்சி நடுநிலைப்பள்ளி  கடந்த வாரம் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடத்தப்பட்டது.  பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். 'ராயபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி' என இருந்த பெயரை, புதிய கட்டடம் திறந்த பிறகு, 'துரோணா பாடசாலை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி' என மாற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள்  ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இதனையடுத்து, 'துரோணா பாடசாலை' என்ற பெயர் மாநகராட்சி நிர்வாகத்தால் நீக்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்