தண்ணீர் தகராறில் பள்ளி மாணவி காயம் : காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என புகார்

சங்கரன்கோவிலில், தண்ணீர் தகராறு தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி காயம் அடைந்த மாணவியுடன் பெற்றோர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
x
திருவேங்கடம் கிராமத்தைச் சேர்ந்த மேடையாண்டி-முத்துமாரி தம்பதியின் மகள் ராசாத்தி 11ஆம் வகுப்பு படித்து வருகிறார். தெருக்குழாயில் தண்ணீர் பிடிக்கும் போது, இவர்களுக்கும் மற்றொருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மாணவி காயம் அடைந்தார். இதனையடுத்து சங்கரன் கோயில் மருத்துவமனையில் மகளை அனுமதித்து பெற்றோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தொடர்பாக புகார் அளித்து மூன்று நாட்களாகியும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், அரசு மருத்துவமனை நுழைவாயிலில், காயம் அடைந்த மாணவியுடன் சாலைமறியல் செய்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சமரச பேச்சுவார்த்தை நடத்த வந்த காவலர்களுடன், அந்த தம்பதி வாக்குவாதம் செய்தனர். பின்னர் இரு தரப்பு புகார் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்