ராமநாதபுரம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது

ராமநாதபுரத்தில் உள்ள சாயல்குடி மற்றும் கமுதி பகுதிகளில், கடந்த சில மாதங்களாக, கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
ராமநாதபுரம் : கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது
x
ராமநாதபுரத்தில் உள்ள சாயல்குடி மற்றும் கமுதி பகுதிகளில், கடந்த சில மாதங்களாக, கஞ்சா விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரையடுத்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கடுகு சந்தை சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காணிக்கூரைச் சேர்ந்த கணேசன் என்பவரை மடக்கிப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதேபோல, கமுதி மேட்டுத்தெருவில் ராஜா என்பவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story

மேலும் செய்திகள்