வானில் அதிசயம் : சூரியனை சுற்றி கரு வட்டம் - ரசித்து பார்த்த மக்கள்

சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை வானத்தில் சூரியனை சுற்றி ஒரு கரு வட்டம் தெரிந்தது.
x
சேலம் மாவட்டம், ஓமலூர் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை வானத்தில் சூரியனை சுற்றி ஒரு கரு வட்டம் தெரிந்தது. கருவட்டத்தின் வளையம் மெலிதான வானவில் போல காட்சியளித்தது. இதனை, வெறும் கண்ணால் பார்க்கும்போது கண்கள் கூசியது. அதே சமயம், குளிர்க் கண்ணாடி போட்டு பார்த்தால் மிகவும் அழகாக, அற்புதமாக காட்சி அளித்தது. காலை எட்டு மணியளவில் தோன்றிய இந்த காட்சி, சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இந்த அற்புதமான காட்சியை அப்பகுதி மக்கள் கண்டு ரசித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்